“நடனங்களை பார்க்கும்போது.. அந்த நடிகைகளின் ஞாபகம் வருது..” – ஜெயக்குமார் மேடையில் பேச்சு

526

சென்னை சாந்தோமில் உள்ள தனியார் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. இந்த விழாவில், சிறப்பு அழைப்பாளர்களாக, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், மீன்வள துறை அமைச்சர் ஜெயக்குமார்,தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் பா. வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பள்ளி மாணவர்களின் பாட்டு, நடனம் போன்ற கலைநிகழ்ச்சிகளை கண்டு கழித்த பிறகு, அமைச்சர் ஜெயக்குமார் மாணவர்களிடம் உரையாற்றினர்.

அப்போது பேசிய அவர், குழந்தைகள் தினத்தன்று தற்போது உள்ள மாணவர்களை பார்க்கும் போது தான் பள்ளி பருவத்தில் தான் செய்த சேட்டைகள் மற்றும் குறும்புகள் நினைவுக்கு வருகிறது என்றும், இதனால் ஆசிரியர்கள் உட்பட பலரிடம் அடிவாங்குவது தன்னுடைய வழக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், மேடையில் அரங்கேறிய நடனங்களை பார்க்கும் போது அந்த காலத்தில் இருந்த நடிகைகளின் ஞாபகம் தனக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மாணவர்கள் தங்களது கனவுகளையும், லட்சியங்களையும் அடைய சோர்வு இல்லாமல் பயணிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதற்கு எடுத்துக்காட்டாக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் திரைப்படத்தில் வரும் தூங்காதே தம்பி தூங்காதே சோம்பேறி என்றபெயர் வாங்காதே என்ற பாடலை பாடிக்காட்டி மாணவர்களை இந்த படல்வரிகளை போல் தங்கள் வாழ்க்கையில் நடந்து கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of