சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் – கடம்பூர் ராஜீ எச்சரிக்கை

864

சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வளர்ந்து வரும் நடிகர் விஜய்க்கு இது நல்லது இல்லை என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.

விஜய் – முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள சர்கார் படம் நேற்று பிரம்மாண்டமாக திரைக்கு வந்தது. அரசியல் படமாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் சுந்தர் ராமசாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அரசை விமர்சிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜீ கூறியுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, “ படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் படத்திற்காக அல்ல, அரசியல் மோட்டிவிற்காக காண்பித்துள்ளனர். இதனை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வளர்ந்து வரும் நடிகர் விஜய்க்கு இது நல்லது கிடையாது.

சென்சார் போர்டு மத்திய அரசின் கீழ் இயங்கி வருகிறது. சர்க்கார் திரைப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் குறித்து அரசுக்கு தகவல் வந்துள்ளது. இது குறித்து முதல்வரிடம் ஆலோசனை நடத்தி அப்படிப்பட்ட காட்சிகள் இருக்கக்கூடாது, நீக்க வேண்டும் என்று அறிவுறுத்துவோம். அவர்களாக நீக்கிவிட்டால் நல்லது இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of