ரேஷன் கடைகளில் பற்றாக்குறை என்பதே இல்லை – அமைச்சர் காமராஜ்

357

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தேனாம்பேட்டை மண்டல அலுவலகத்தில் இன்று அமைச்சர் காமராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கொரோனா நிவாரணத் தொகை வழங்கும் பணி, தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதுவரை 94 சதவீதம் மக்கள் நிவாரணத் தொகையை பெற்றுக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

பொது விநியோகத் திட்டத்தில் எந்தவித மாற்றமும் இருக்காது என கூறிய அவர், எப்போதும் போல விலையில்லா பொருட்கள் வழங்கப்படும் என்றார்.

மேலும் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பற்றாக்குறை என்பதே இல்லை என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

ரேஷன் கடைகளில் தேவையான அளவிற்கு கோதுமை இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தேவை இருப்பவர்கள் அதனை தங்கள் பகுதிக்கு உட்பட்ட ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறினார்.

Advertisement