அமைச்சரின் பதவி நீக்கத்திற்கு இதுதான் காரணம்..? வெளியான அதிர்ச்சி தகவல்..!

686

முதலமைச்சர் மற்றும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை விமர்சித்ததே மணிகண்டனின் அமைச்சர் பதவி பறிப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மணிகண்டன், அரசு கேபிள் டி.வி கட்டணம் குறைப்பு தொடர்பாக முதலமைச்சர் தன்னிடம் ஆலோசிக்கவில்லை என்றும், அரசின் இந்த முடிவால் ஆண்டுக்கு 27 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என தெரிவித்தார்.

அரசு கேபிள் டி.வி தலைவராக உள்ள அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், நடத்தி வரும் தனியார் கேபிள் டி.வி நிறுவனத்திற்கு 2 லட்சம் வாடிக்கையாளர்கள் இருப்பதாக குறிப்பிட்ட அவர், அந்த வாடிக்கையாளர்களை அரசு கேபிள் டி.வி-யில் இணைக்க வேண்டும் என கூறினார்.

மணிகண்டனின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of