தகவல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சரின் பதவி பறிப்பு…!

1444

அதிமுக கட்சியை சேர்ந்தவர் மணிகண்டன்.  இவர் ராமநாதபுரம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.  இவர், முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையில், தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராக செயல்பட்டு வந்தார். Related image

இந்த நிலையில், தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் பதவியில் இருந்து மணிகண்டன் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.

பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் பரிந்துரையை ஏற்று அமைச்சரவையில் இருந்து மணிகண்டன் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.Related image

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில் அமைச்சர் ஒருவர் தனது அமைச்சரைவை பதவியில் இருந்து நீக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.  இதை அடுத்து, தகவல் மற்றும் தொழில் நுட்பத்துறையை, வருவாய்த்துறை அமைச்சர்  ஆர்.பி. உதயகுமார் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.