பேச்சுக்கு சுதந்திரம் உண்டு என்பதை நாள் தோறும் நினைவு படுத்த வேண்டுமா? – அமைச்சர் ப.சிதம்பரம்

740

பேச்சுக்கு சுதந்திரம் உண்டு என்பதை நாள் தோறும் நினைவு படுத்த வேண்டுமா? என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னையில் தனியார் யு-டியூப் சேனல் சார்பாக ஒரு மாதத்துக்கு முன்பு இணையவழி கருத்தரங்கு நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்று மனுதர்மம் குறித்து பேசியது சர்ச்சையானது.

இந்நிலையில் எம்.பி திருமாவளவன் பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக இந்து இயக்கத்தினரும், பாரதிய ஜனதா உள்ளிட்ட சில கட்சிகளும் குற்றம்சாட்டி வந்தன. இதனைத் தொடர்ந்து அவர் மீது 6 பிரிவுகளின்கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் தெரிவித்த கருத்தி, தந்தை பெரியார் பற்றிய கருத்தரங்கில் திருமாவளவன் ஆற்றிய உரை, குற்றம் என்று காவல் துறை வழக்கு பதிவு செய்ததாக குறிப்பிட்டார்.

பேசிய பொருள் ஏற்படையதா இல்லையா என்பது பற்றி இரண்டு கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் அது எப்படி குற்றம் ஆகும்? என்று கேள்வி எழுப்பிய அவர், பேச்சுக்கு சுதந்திரம் உண்டு என்பதை நாள் தோறும் நினைவு படுத்த வேண்டுமா? என்றும் கேட்டுள்ளார். இது போன்ற கருத்துக்களைத் தந்தை பெரியார் அன்று பேசினார்.

இன்று அவர் பேசியிருந்தால் காவல் துறை என்ன செய்திருப்பார்கள்? என கேள்வி எழுப்பி உள்ளார்.

Advertisement