வாக்கு வங்கியே இல்ல..- தேமுதிக-வை வம்பிற்கு இழுக்கும் அமைச்சர்

699

வாக்கு வங்கியே இல்லாத தேமுதிக பெரிய கட்சியான அதிமுகவை சீண்டிப்பார்க்க வேண்டாம் என்று அதிமுக அமைச்சர் எம்எல்ஏ ராஜேந்திர பாலாஜி கடுமையான குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

லோக்சபா தேர்தலில் தேமுதிக இன்னும் தனது கூட்டணி நிலைப்பாட்டை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கும் என்பதுதான் பெரிய கேள்வியாக இருக்கிறது.

திமுக கூட்டணியா, தேமுதிக கூட்டணியா, மூன்றாவது அணியா என்ற எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது. பெரும்பாலும் அதிமுக கூட்டணிக்கு தேமுதிக கட்சி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தையும் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தேமுதிக திடீர் திருப்பமாக திமுக உடனும் பேச்சுவார்த்தை நடத்தியது. அதேபோல் 40 லோக்சபா தொகுதிகளுக்கும் விருப்பமனுவும் வாங்கி வருகிறது.

இதற்கு இடையில் தற்போது தேமுதிக – அதிமுக இடையே புதிய சண்டை உருவாகி உள்ளது.

இதுதொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிவகாசி நாராயணபுரத்தில் நடைபெற்ற ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவில் மேலும் பேசியதாவது;

தேமுதிக மீது அதிமுக அமைச்சர் எம்எல்ஏ ராஜேந்திர பாலாஜி கடுமையான புகார்களை வைத்து உள்ளார்.
அதிமுகவை தேமுதிக சீண்டிப்பார்க்க வேண்டாம். அதிமுக பெரிய கட்சி என்பது தேமுதிகவுக்கு தெரியாதா? தேமுதிக இதுபோன்ற செயல்களை நிறுத்த வேண்டும்.
தேமுதிக சின்ன பையனைவிட்டு எங்களிடம் பேச வைக்கிறது. தேமுதிகவுக்கு வாக்கு வங்கியே கிடையாது.அவர்கள் ஏன் இத்தனை இடங்கள் கேட்கிறார்கள்?

நீங்க அதிமுகவிற்கு எதிராக ரொம்ப பேசினா, நாங்களும் அதைவிட ரொம்ப பேசுவோம். நாங்கள் விரைவில் எங்கள் கூட்டணி குறித்து அறிவிப்போம். மார்ச் 5 க்கு பிறகு பாருங்க.. வேடிக்கையை வச்சுக்கிறோம்.

எது வருது, எது போகுது என பார்ப்போம். அதிமுக – பாஜக இடையே கொள்கை வேறுபாடு கிடையாது. அதிமுக அதிரடி முடிவுகளை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. தேர்தலில் ஜெயிக்க யாருடனும் கூட்டணி அமைப்போம், என்று ராஜேந்திர பாலாஜி தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of