தமிழகத்தை போல், புதுச்சேரியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க கோரி எம்.எல்.ஏ சாமிநாதன் தர்ணா போராட்டம்

தமிழகத்தை போல், புதுச்சேரியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க கோரி பாஜக நியமன எம்.எல்.ஏ சாமிநாதன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நாளை முதல் அமலுக்கு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தை போல், புதுச்சேரியிலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க வலியுறுத்தி பாஜக நியமன எம்.எல்.ஏ சாமிநாதன். சட்டபேரவை வாளகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கபட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் தடை விதிக்கவில்லை என்றால், கள்ள பிளாஸ்டிக் சந்தையாக மாற வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of