முதல்வருக்கும் – பாண்டிய மன்னனுக்கும் இப்படி ஒரு ஒற்றுமையா- செல்லூர் ராஜூ அபாரம்!

454

மதுரையை காப்பாற்ற பாண்டிய மன்னன் நடவடிக்கை எடுத்தது போல், முதலமைச்சர் பழனிச்சாமி தமிழகத்தை காப்பாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரையில் கண்மாயை தூர்வாருதல், கரையை பலப்படுத்துதல், சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், மத்திய பட்ஜெட் வரவேற்கத்தக்கது என்றும், அருமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது எனவும் கூறினார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாண்டிய மன்னரின் புறநானூறு பாடலை மேற்கோள்காட்டி பேசியது பாராட்டுக்குரியது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மதுரையை காப்பாற்ற பாண்டிய மன்னன் என்ன நடவடிக்கை எடுத்தாரோ, அதேப் போல முதலமைச்சர் பழனிசாமி, தமிழகத்தை காப்பாற்ற பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்று கூறினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of