இதை முழுமையாக செய்தாலே நீட் தேர்வில் 80% பாஸ் – செங்கோட்டையன்

391

பனிரெண்டாம் ஆம் வகுப்பு பாடத்திட்டத்தை மாணவர்கள் முழுமையாக படித்தாலே நீட் தேர்வில் 80 சதவீதம் தேர்ச்சி அடையலாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்வி பதில் நேரத்தின் போது பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ், மத்திய அரசு கொண்டுவரும் நீட் உள்ளிட்ட மக்கள் ஏற்றுக்கொள்ளாத பல்வேறு திட்டங்களை தமிழக அரசு ஏன் செயல்படுத்துகிறது என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் நீட் தேர்விற்காக அரசு சார்பில் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், நீட் தேர்வை மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ளும் வகையில் பனிரெண்டாம் ஆம் வகுப்பு பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

தமிழக அரசு கொண்டு வந்துள்ள பனிரெண்டாம் ஆம் வகுப்பு பாடத்திட்டத்தை மாணவர்கள் முழுமையாக படித்தாலே நீட் தேர்வில் 80 சதவீதம் தேர்ச்சி அடையலாம் என்று அவர் தெரிவித்தார்.