“இனி கவலை வேண்டாம்!” திருநங்கைகளுக்கு அரசின் அதிரடி ஏற்பாடு!

943

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தவருக்கான பன்னோக்கு மருத்துவ மையம் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மூன்றாம் பாலினத்தவருக்கான பன்னோக்கு மருத்துவ மையம் இன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் திறக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் திருநங்கைகள் என பலர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தேவையான அனைத்து பாலின மாற்று அறுவை சிகிச்சைகளையும் மேற்கொள்ள மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஆன்லைன் மூலம் தங்களின் விவரங்களை பதிவு செய்து, அதன் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்தார்.

Advertisement