5 மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.. விஜயபாஸ்கர் எச்சரிக்கை..

4325

ஐந்து மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும், கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டுமெனவும் தமிழக சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுகொண்டுள்ளார்.

தமிழகத்தில் நிலவும் வைரஸ் பரவலை தடுக்க, அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இருப்பினும், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.

இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வீதிகளில் காய்ச்சல் முகாம்கள் மூலம் மக்களை நேரில் சென்று வைரஸ் தொற்று அறிகுறிகள் உள்ளதா என்று பார்க்க இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், பொதுமக்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டுமென்று கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர், முகக்கவசம் இல்லாமல் இருப்பதாலையே வைரஸ் தொற்று பரவிகொண்டு இருப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கோவை, சேலம், திருவண்ணாமலை, நாகை, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் வைரஸ் தொற்று பரிசோதனைகளை தீவிரபடுத்த இருப்பதாக தெரிவித்தார்.

Advertisement