ஞானப்பழம் தந்த பழனிச்சாமி – விஜயபாஸ்கர்

4839

சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில், மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துக் கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று தெரிவித்தார்.

மேலும், முதல்வரின் சிந்தனையில் உதித்த, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவச் சேர்க்கை நடைபெறும் நாள் இது என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், எம்பிபிஎஸ் இடம் என்ற ஞானப்பழம் தரக்கூடிய பழனிசுவாமியாக முதல்வர் பழனிசாமி உள்ளார் என்றும் விஜயபாஸ்கர் புகழாரம் சூட்டினார்.

Advertisement