அரசு விழாவில் பல்லிளித்த பேனர்கள்.. கட்சியினரால் எரிச்சலைடந்த அமைச்சர்கள்..

381

அருப்புக்கோட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் கட்சியின் உத்தரவை மீறி வழிநெடுகிலும் பேனர்களை வைத்திருந்ததால் அதிர்ச்சியடைந்த அமைச்சர்கள் அவற்றை அகற்றிய பின் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தமிழக கூட்டுறவுத்துறை சார்பில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்திநகரில் புதிதாக கூட்டுறவு பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் இந்த பங்க்கை திறந்து வைப்பதற்காக இன்று வந்தனர். அப்போது, அமைச்சர்களை வரவேற்று வழிநெடுகிலும் ஏராளமான பேனர்களை கட்சியினர் வைத்திருந்தனர்.

இந்த பேனர்களை கண்டு கோபமடைந்த அமைச்சர்கள் இரண்டு பேரும், பேனர் விழுந்து சென்னையில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார். அதனால் இனி யாரும் பேனர் வைக்கக் கூடாது என கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.

எனவே, உடனடியாக இங்கே உள்ள பேனர்கள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என தெரிவித்தனர். ஆனால், கட்சியினரோ விழா முடிந்தவுடன் அகற்றிவிடுகிறோம் என கூறினர்.

இதனை ஏற்றுக் கொள்ளாத அமைச்சர்கள், பேனர்களை உடனடியாக அகற்றினால் மட்டுமே விழாவில் பங்கேற்போம். இல்லையெனில் பங்கேற்ற மாட்டோம் என உறுதியாக கூறி நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு அருகிலேயே அமர்ந்துவிட்டனர்.

இதனால் அக்கட்சியினர் உடனடியாக அங்கே இருந்த பேனர்களை அகற்றினர். அதன்பிறகு இனி யாரும் இதுபோல பேனர்களை வைக்கக் கூடாது என கூறிய அமைச்சர்கள் இருவரும் விழாவில் பங்கேற்றனர். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு நிலவியது!

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of