தமது மகன் பற்றி சமூக வலைதளங்களில் தவறான தகவல்” – அமைச்சர் சி.வி.சண்முகம் புகார்

417

தமது மகன் குறித்து தவறான தகவல் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் நேரில் புகார் அளித்தார்.

கடந்த 2 நாட்களாக குடிபோதையில் இளைஞர் ஒருவர் போலீஸாருடன் தகராறு செய்வதாக  வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலை தளங்களில் பரவியது. இந்த இளைஞர் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகத்தின் மகன் என்று அதில் பதிவிடப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதனை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார். அதில் தமது பெயரையும் மகனின் நற்பெயரையும் கெடுக்கும் வகையில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருவதாகவும் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து கைது செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of