நள்ளிரவில் மாடல் அழகிக்கு நடந்த சோகம் – 7 இளைஞர்கள் கைது

890

கொல்கத்தாவில் கடந்த திங்களன்று நள்ளிரவு பணி முடிந்து உபர் வாடகை டாக்ஸியில் திரும்பிக்கொண்டிருந்த முன்னாள் மிஸ் இந்தியா பட்டம் வென்றவரும் நடிகையுமான உசோஷி சென்குப்தாவை இருசக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத இளைஞர் கும்பல் காரிலிருந்து இழுத்து, அவருக்கு கடும் இன்னல் கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு மிஸ் இந்தியா அழகி பட்டம் வென்றவர் கொல்கத்தாவை சேர்ந்த உசோஷி சென்குப்தா (வயது 30), அதே ஆண்டு அமெரிக்காவின் நேவடா நகரில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொண்டார்.

மாடல் அழகியாகவும், திரைப்பட நாயகியாகவும் வலம் வரும் இவர் கடந்த 17ம் தேதி இரவு 11.40 மணியளவில் பணிமுடிந்து வீட்டுக்கு உபர் நிறுவன டேக்ஸியில் தனது நண்பருடன் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

Last night 18th June 2019 at around 11:40 pm I took an uber from JW Marriott kolkata to go back home after finishing…

Ushoshi Sengupta यांनी वर पोस्ट केले मंगळवार, १८ जून, २०१९

எக்ஸைட் சந்திப்பில் இருந்து ஜவஹர்லால் சாலையில் கார் திரும்பிய போது இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் வந்திருந்த 15 இளைஞர்கள் அந்த காரின் ஓட்டுனரை வெளியே இழுத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியான சென்குப்தா காரை விட்டு வெளியே வந்து கத்தியுள்ளார்.

இதனை வீடியோ பதிவாக தனது செல்ஃபோனில் ரெக்கார்ட் செய்த சென்குப்தா, அருகில் இருந்த மைதான் காவல்நிலையதிற்கு ஓடிச்சென்று விஷயத்தை கூறி உதவிக்கு அழைத்துள்ளார்.

இருப்பினும் இது அவர்களது சரகம் இல்லை எனக்கூறி பவானிப்பூர் காவல்நிலையத்துக்கு செல்லுமாறு கூறியுள்ளதாக சென்குப்தா குறிப்பிட்டார். இருப்பினும் ஒரு காவலர் நிகழ்விடத்திற்கு சென்குப்தாவுடன் வந்தபோது அந்த இளைஞர்கள் அங்கிருந்து ஓடிச்சென்றுள்ளனர்.

பின்னர் அதே டேக்ஸியில் தனது நண்பரின் வீட்டை நோக்கி அவர்கள் பயணமானார்கள். இதன்பிறகும் அக்காரை விரட்டிச்சென்ற அந்த இளைஞர்கள் நண்பரின் வீட்டில் கார் நின்றபோது காரை சூழ்ந்துகொண்டு கற்களால் தாக்கி காரை சேதப்படுத்தியுள்ளனர்.

பின்னர் காரில் இருந்த சென்குப்தாவை பலவந்தமாக கீழிறக்கி அவரின் செல்போனை பறித்து அதில் உள்ள வீடியோவை அழிக்க முயற்சித்துள்ளனர். கடும் அதிர்ச்சியடைந்த சென்குப்தா கூச்சலிட்டதனால் அருகில் இருந்தோர் அங்கு வந்த பின்னர் இளைஞர்கள் அங்கிருந்து மீண்டும் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து சாருமார்க்கெட் காவல்நிலையத்திற்கு சென்று சென்குப்தா புகார் அளித்தார். அதே நேரத்தில் உபர் டேக்ஸி ஓட்டுநர் அளித்த புகாரை ஏற்க அவர்கள் மறுத்துவிட்டனர். ஒரே விவகாரத்திற்காக இரண்டு புகார்களை பதிய சட்டத்தில் இடமில்லை என்று அவர்கள் கூறியதாக சென்குப்தா குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விவரித்து அந்த வீடியோவையும், உடைந்த காரின் புகைப்படத்தையும் தனது ஃபேஸ்புக்கில் சென்குப்தா பதிவிட்டுள்ளார்.

நான் இந்த நகரத்தைச் சேர்ந்தவள், இங்கிருந்து சென்ற நான் மீண்டும் இங்கு திரும்பியுள்ளேன், ஆனால் எனக்கு தெரிந்த கொல்கத்தாவாக இது இருக்கமுடியாது என்று மிகவும் வருத்தப்பட்டு அவர் பதிவிட்டுள்ள இந்த முகநூல் பதிவு தற்போது வைரலாகியுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக 7 பேரை கொல்கத்தா காவல்துறை கைது செய்துள்ளது. இருப்பினும் இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of