எம்.ஜே.அக்பரின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டார் குடியரசுத் தலைவர்

426

ME Too மூலம் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர். மீது பெண் பத்திரிகையாளர் ப்ரியா ரமணி பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்தார். பிரியா ரமணியைத் தொடர்ந்து, எம்.ஜே.அக்பர் பத்திரிகையாளராக இருந்தபோது பாலியல் தொல்லை கொடுத்ததாக 10-க்கும் மேற்பட்ட பெண் பத்திரிகையாளர்களும் அவர் மீது புகார் தெரிவித்தனர்.

எதிர்கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்ததால் எம்.ஜே. அக்பருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, எம்.ஜே.அக்பர் கடிதம் எழுதினார்.

இதைதொடர்ந்து எம்.ஜே.அக்பரின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார். இதனிடையே தம் மீது பாலியல் புகார் கூறிய ப்ரியா ரமணிக்கு எதிராக எம்.ஜே.அக்பர் தொடர்ந்த கிரிமினல் வழக்கு, டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of