பாலியல் புகாருக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா

739

பாலியல் புகாருக்கு உள்ளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார். எம்.ஜே.அக்பர் பத்திரிக்கை ஆசிரியராக இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக 20 பெண் பத்திரிகையாளர்கள் புகார் அளித்தனர். மேலும் 20 பெண்களும் தங்கள் புகாரில் உறுதியாக இருந்ததை தொடர்ந்து எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்.

அமைச்சர் பதவியில் இருந்து விலகி குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள முடிவு எடுத்துள்ளதாகவும், மேலும் அமைச்சராக வாய்ப்பு கொடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றியும் எம்.ஜே.அக்பர் தெரிவித்து கொண்டார்.