அமைச்சர் வேலுமணியை விமர்சிப்பதற்காக, திமுக-வினர் கைது செய்யப்பட்டால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்

158

உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியை விமர்சிப்பதற்காக, இனியும் திமுக-வினர் கைது செய்யப்பட்டால், மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவையில் கிராமசபைக் கூட்டத்தில், உள்ளாட்சித் துறை அமைச்சர் பற்றிப் பேசியதற்காக, திமுக பிரமுகர் கைது செய்யப்படதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமைச்சரை எதிர்த்துப் போராடினாலோ, குறை சொன்னாலோ, கைது என்ற அடக்குமுறையை ஏவி விடுவது வெட்கக்கேடானது என தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் ஆளுங்கட்சிக்கு கட்டுப்பட்டு, தனியார் காவலாளிகள் போல் செயல்படுவதாக விமர்சித்தார். இனியும் கைது நடவடிக்கை தொடர்ந்தால், தானே போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றும் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of