குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்ததற்காக, முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் – ஸ்டாலின்

592

சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அவர், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இமயம் முதல் குமரி வரை நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

டெல்லி வன்முறைக்கு யார் காரணம் என்றும், மத்திய உள்துறை அமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். மேலும் பேசிய அவர் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்ததற்காக, முதலமைச்சர் பழனிசாமி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.