கருணாநிதியின் குடும்பச் சொத்து விவரங்கள் பற்றி மு.க.ஸ்டாலின் சொல்ல முடியுமா

199
stalin

கருணாநிதியின் குடும்பச் சொத்து விவரங்கள் பற்றி மு.க.ஸ்டாலின் சொல்ல முடியுமா என்று அமைச்சர் உதயகுமார் சவால் விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், முதலமைச்சர், அமைச்சர்கள் மீது உண்மைக்கு புறம்பாக, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக ஸ்டாலினுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பொறுப்பற்ற அவதூறு பேச்சுகளை ஸ்டாலின் நிறுத்தி கொண்டு, பண்பட்ட அரசியல் பணிகளை மேற்கொள்வது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். கருணாநிதி மற்றும் மகன்கள், மகள்கள் உள்ளிட்டோரின் சொத்து விவரம் பற்றி கேட்கும் கேள்விகளுக்கு ஸ்டாலின் பதில் சொல்ல முடியுமா என்றும் அமைச்சர் உதயகுமார் சவால் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here