“IIT மாணவி தாயின் கூற்று தமிழகத்தின் மீதான நம்பிக்கையை தகர்த்திருக்கிறது” – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..!

467

மாணவி பாத்திமா லத்திப் மரணம் குறித்து அவரது தாய் கூறியிருப்பது தமிழகத்தின் மீதான நம்பிக்கை தகர்க்கப்பட்டதை காட்டுகிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடி-யில் கேரளாவைச் சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி கடந்த சனிக்கிழமை மர்மமான முறையில் தனது அறையில் இறந்துகிடந்தார். இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி நேற்று மாலை ஐ.ஐ.டி வளாகத்தை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பினர் முற்றுகையிட முயன்றனர். 

இதுகுறித்து மாணவியின் தாய், தற்கால சூழலில் நாட்டில் நிலவும் பிரச்சனைகளுக்கு தமிழகம் தான் பாதுகாப்பாக இருக்கும் என அனுப்பிவைத்தோம் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்பொழுது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

மாணவி பாத்திமா லத்திப் மரணம் குறித்து தாய் கூறியிருப்பது தமிழகத்தின் மீதான நம்பிக்கை தகர்க்கப்பட்டதை காட்டுகிறது.

மாணவி மரணத்தில் நேர்மையான விசாரணை தேவை; மத்திய கல்வி கூடங்கள் காவிமயமாவதை தடுத்து நிறுத்த வேண்டும். உயர்கல்வி நிலையங்களில் சமமான உரிமைகள் வழங்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் என தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of