கி.வீரமணியை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின்

266

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிட கழகத்தலைவர் கி. வீரமணியை நேரில் சந்தித்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்.

மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி ஆகஸ்ட் 7 ஆம் தேதி, அவரின் சிலை திறக்கப்படுகிறது. கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி சிலையை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி திறந்து வைக்கிறார்.

சிலை திறப்பு விழாவிற்கு நடிகர் ரஜினி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோருக்கு ஏற்கனவே திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திமுக தலைவர் மு,க.ஸ்டாலின், திராவிட கழகத் தலைவர் கி.வீரமணியை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர், கருணாநிதியின் சிலை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை வழங்கி அவரை வரவேற்றார்.

Advertisement