இடைத்தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த ஸ்டாலின்..! – என்ன சொன்னார் தெரியுமா?

375

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் மக்கள் தீர்ப்பினைத் தலைவணங்கி ஏற்கிறோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இருதொகுதி தேர்தல் முடிவுகள் குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், ‘2 இடைத்தேர்தல்களிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இடைத்தேர்தலுக்காக இரவு, பகல் பார்க்காமல் உழைத்த அனைவருக்கும் நன்றி. கடந்த கால படிப்பினைகளுடன் எதிர்காலத்தை நிச்சயம் வெல்வோம். திமுகவை பொறுத்தவரை வெற்றியால் களிப்பிலாடுவதும், தோல்வியில் துவண்டு விடுவதும் இல்லை.

ஆளுங்கட்சியின் பணபலம், அதிகார துஷ்பிரயோகத்தை மீறி மதச்சார்பற்ற கூட்டணிக்கு வாக்களித்துள்ளார்கள். வாக்களிக்காதவர்களின் நம்பிக்கையை பெற தொடர்ந்து உழைப்போம். மகாராஷ்டிரா, ஹரியானாவில் புதிதாக அமையவுள்ள அரசுகளுக்கும் வாழ்த்துகள்’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.