“இனிமே பேனர் வைத்தால்..,” – தொண்டர்களுக்கு ஷாக் கொடுத்த ஸ்டாலின்..!

554

சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுபாஸ்ரீ. 23 வயதாகியுள்ள இவர் பி.டெக் பட்டதாரி. தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் சுபாஸ்ரீ, பள்ளிக்கரணை பகுதி வழியாக தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் வாகனத்தில் வந்துக்கொண்டிருந்த போது, பிரதான சாலையில் அதிமுக பிரமுகர் வைத்திருந்த பேனர் சாலையில் விழுந்தது.

இதனால் நிலைத்தடுமாறிய சுபாஸ்ரீ, கீழே விழுந்துள்ளார். அப்போது அங்கு வந்து லாரி, அவர் மீது ஏறி சம்பவ இடத்திலேயே அந்த பெண் உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் அவரது தொண்டர்களுக்கு அறிக்கை அளித்துள்ளார். அதில், திமுக நிகழ்ச்சிகளில் யாரும் பேனர், கட்-அவுட் வைக்கக்கூடாது என்றும், அவ்வாறு வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொண்டர்களை எச்சரித்துள்ளார்.

போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக் கூடாது என்று கூறிய அவர், தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பேனர்கள், பிளக்ஸ்போர்டுகள் வைத்தால், நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of