‘தந்தை பெரியாரின் 45வது நினைவுதினம்’ மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

341

தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தந்தை பெரியாரின் 45வது நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று சென்னை சிம்சன் அருகே உள்ள அவரது சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்ட திருஉருவப்படத்திற்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வின் போது திமுக பொருளாளர் துரைமுருகன், மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.