மோடி, அமித்ஷாவிடம் அடகு வைக்கும் பொருட்களை மீட்க முடியுமா? ஸ்டாலின்

367

நடக்க இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளராக வடசென்னையில் களமிறங்க இருக்கும் கலாநிதி வீராசாமியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் கூறுகையில்,

இந்த தொகுதியில் தேர்தல் நடக்காமலும், வாக்குகளை எண்ணாமலே சொல்லலாம் திமுகவிற்கு தான் வெற்றி என்பதை, அதுமட்டுமின்றி, திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மறைவுக்கு காரணமானவர்களை விரைவில் கண்டறிந்து உரிய தண்டனை வழங்கப்படும்.

அதுமட்டுமின்றி, மோடி, அமித்ஷாவிடம் அடகு வைக்கப்படும் பொருளை மீட்க முடியுமா? அதிமுக ஆட்சி கோமா நிலைக்கு சென்றுவிட்டது. தரக்குறைவாக பேச திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதி எங்களுக்கு கற்றுக்கொடுக்கவில்லை.

நான் தான் கடவுள் எனக்கூறும் முதல்வர் தமிழகத்தில் மட்டும் தான் உள்ளார். வாரிசுகள் என்ற காரணத்தினால் தகுதியானவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் இருக்க முடியுமா? திமுக நிறுத்தும் வேட்பாளர் தகுதி பெற்றவரா என ஆராயுங்கள், ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டாம் என தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of