நான் சீசனுக்கு வருபவன் இல்லை.., ஸ்டாலின் காட்டம்

334

தேர்தலுக்காக வந்து செல்பவர்கள் நாங்கள் கிடையாது. எப்போதும் மக்களுடனே இருக்கின்றோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து தனக்கன்குளத்தில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், தேர்தலுக்காக வந்து செல்பவர்கள் நாங்கள் கிடையாது, எப்போதும் மக்களுடனே இருக்கின்றோம். தனக்கன்குளத்தில் இருந்து செல்லும் சாலை 4 வழிச் சாலையுடன் இணைக்கப்படும். உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்திருந்தால் மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைத்திருக்கும்’ என்றார் மு.க.ஸ்டாலின்.

Advertisement