மதயானை புகுந்து நாசம் செய்துவிடும் – ஸ்டாலின்

298

புதிய கல்விக் கொள்கை குறித்து காணொலி காட்சி மூலம் கருத்து மேடை நடைபெற்றது. அதில் திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,  உயர்கல்வி பயில்வது கடினமாக்கும் சூழலை புதிய கல்வி கொள்கை உருவாக்குகிறது என்றும், இந்த கல்வி கொள்கையை தமிழக அரசு எதிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

புதிய கல்விக் கொள்கை மறைமுகமாக குலக்கல்வியை கொண்டு வரும் திட்டம் என்று கூறிய ஸ்டாலின், கல்வி கொள்கை குறித்து பிரதமர் மோடி உண்மைக்கு புறம்பான கருத்துகளை வெளியிடுவதாக குற்றம் சாட்டினார்.

அதிமுக மெளனம் காக்கக் கூடாது என்றும் புதிய கல்விக் கொள்கையை அதிமுக எதிர்க்காமல் இருந்தால், அது அண்ணாவிற்கு செய்யும் துரோகம் என்றும் அவர் தெரிவித்தார். அனைத்து கட்சிகளும் புதிய கல்வி கொள்கையை எதிர்க்க வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், கல்வியில் சிறந்த தமிழகத்தில் புதிய கல்வி கொள்கை என்ற மதயானை புகுந்து நாசம் செய்துவிடும் என்பதால், அதனை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என வலிறுத்தியுனார்.

Advertisement