வரப்போவது தேர்தல் அல்ல ‘போர்’.., ஸ்டாலின் சரவெடி

374

பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் முதல்கட்டமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் திமுக தலைவர் மு.க ஸ்டாலினும் நாகர்கோவிலில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினர்.

இதில் திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்கள் மத்தியில் பேசுகையில்,

வடக்கே வல்லபாய் படேல் மற்றும் தெற்கே காமராஜரை வைத்து பாஜகவினர் ஓட்டு கேட்கிறார்கள். அவர்களை பார்த்தாலேபரிதாபமாக இருக்கிறது.மோடியின் பினாமி ஆட்சியான அதிமுக ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. முதல்வரை பிரதமர் மிரட்டுகிறார். கொத்தடிமை ஆட்சி தான் இங்கு நடைபெற்று கொண்டிருக்கிறது.

பொள்ளாச்சியில் 200க்கு மேற்பட்ட பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். ஆனால், ஆளும் கட்சியினர் மீடியாக்களை மிரட்டுகின்றனர். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது

வரப்போவதுதேர்தல் இல்லை; அதுஜனநாயக போர்;ஆட்சி மாற்றம் இல்லை; அதிகாரமாற்றம். எனவே மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். வரும் தேர்தல்களில்40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் தலைவருக்கு நான் உறுதி அளிக்கிறேன்” என்றார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of