பொய்யர்களின் கூடாரம் மத்திய – மாநில அரசுகள் – மு.க.ஸ்டாலின்

687

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘தமிழகத்தில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைய மத்திய அரசு 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியதாகவும், இதற்காக மதுரையில் அமைக்க ஒப்புதல் தரப்பட்டு கட்டுமானப் பணிகள்தான் தொடங்கவேண்டும் என்றனர் மத்திய, மாநில அரசின் அமைச்சர்கள்.

mk-stalin-tweet mk-stalin-statement

ஆனால், இவை அனைத்தும் பொய் என்பதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் தகவல் உறுதிப்படுத்தியுள்ளது. பொய்யர்களின் கூடாரம் மத்திய-மாநில அரசுகள்’என்று பதிவிட்டுள்ளார். மேலும் மதுரையை சேர்ந்த ஹக்கீம் காசிம் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் விண்ணப்பித்து பெற்ற, அது தொடர்பான விவரங்கள் அடங்கிய கடிதத்தையும் மு.க.ஸ்டாலின் பதிவேற்றம் செய்துள்ளார்.

Advertisement