“வெங்காயத்தை உரிக்கும்போது மட்டுமே கண்ணீர் வந்துக்கொண்டிருந்தது..” – ஸ்டாலின் பளார் அறிக்கை..

225

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் வெங்காயத்தின் விலை அதிகரித்த வண்ணம் உள்ளன. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், வெங்காயம், ஏழை – எளிய – நடுத்தர மக்களுக்கு எட்டாத அபூர்வமான பொருளாகி விட்டது என்றும், இதனால் பெரும்பாலானோர் வெங்காயம் வாங்குவதையே நிறுத்திவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இது ஏதோ சாதாரண வெங்காயம்தானே என்று ஆட்சியாளர்கள் நினைக்கக் கூடாது என குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், கடந்த காலத்தில் தேர்தல் முடிவுகளையே, மாற்றக் கூடிய முக்கியமான அம்சமாக வெங்காயத்தின் விலைகள் இருந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

வெங்காயம் மட்டுமல்ல, பூண்டு, முருங்கைக்காய், சமையல் எண்ணெய் ஆகியவையும் பற்றாக்குறை என செய்திகள் வருவதாகவும், எனவே, உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு இன்றியும் நியாய விலையிலும் கிடைப்பதற்கு மத்திய – மாநில அரசுகள் கவனம் செலுத்துவது மட்டுமின்றி, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of