கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் கட்டும் முடிவை கைவிடவேண்டும்- ஸ்டாலின்

480

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கூடங்குளம் அணுஉலை தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே வைப்பதற்கான வசதியை 5 ஆண்டுகளில் ஏற்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டது. இது முக்கியமான நிபந்தனை ஆகும்.

கூடங்குளம் வளாகத்திற்குள்ளாகவே அணுக்கழிவு மையம் கட்டுவதற்கு ஜூலை 10ஆம் தேதி  பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது பேரதிர்ச்சியளிக்கிறது.

தமிழக மக்களின் உயிரைப் பணயமாக வைத்து அணுக்கழிவு வசதிகளை உருவாக்குவது மனித உயிர்களை “சோதனைக்கூடப் பொருட்களாக ஆக்குவதற்கு மத்திய- மாநில அரசுகள் முயற்சிக்கின்றன என்ற சந்தேகமே எழுகிறது. அணுக்கழிவு மையம் அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது.

நிரந்தர கழிவு மையம் அமைப்பது குறித்த தெளிவான திட்டத்தை மத்திய அரசு உருவாக்கும் வரை இரண்டு உலைகளிலும் மின்னுற்பத்தியை நிறுத்த வேண்டும்.  எனவே மத்திய அரசும், அதிமுக அரசும் மக்களின் பாதுகாப்பையும் சுற்றுப்புறச்சூழலையும் பாதுகாக்க கூடங்குளம் வளாகத்திற்குள்ளேயே அணுக்கழிவு மையம் கட்டும் முடிவினை உடனடியாக கைவிட்டு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of