பரியேறும் பெருமாள் படத்தை பாராட்டிய மு.க.ஸ்டாலின்

573

இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி வெளியான படம் ’பரியேறும் பெருமாள்’. மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் நடிப்பில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

சமத்துவத்தையும் பேரன்பையும் அழுத்தமாக பதிவு செய்த இத்திரைப்படம் பலரது பாராட்டுதல்களையும் பெற்று வருகிறது.

இந்நிலையில் பரியேறும் பெருமாள் படத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பார்த்து, படக்குழுவினருக்கு பாராட்டுதலை தெரிவித்துள்ளார்.

மேலும் உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆகியோரும் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.