அண்ணா நினைவு இல்லத்திற்கு சென்ற மு.க.ஸ்டாலின் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

436

காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்திற்கு சென்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தி.மு.க. தலைவராக கருணாநிதியின் மறைவைத் தொடர்ந்து, அக்கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டங்கள் அடுத்தடுத்து நடைபெற்றன. இதில் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிறகு நேற்று முதல் முறையாக, காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா இல்லத்திற்கு சென்ற ஸ்டாலினுக்கு தி.மு.க தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின், அங்குள்ள பதிவேட்டிலும் கையெழுத்திட்டார்.

Advertisement