பாஜக கேட்க பயப்படும் இரண்டு வார்த்தைகள்? ஸ்டாலின் அதிரடி

298

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திஇன்று தமிழகம் வந்துள்ளதையடுத்து, நாகர்கோவில் ஸ்காட் கல்லூரியில்திமுக- காங்கிரஸ் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ராகுலை வரவேற்று பேசினார்.

அப்போது அவர், “ரபேல் ஆவணங்கள் வெளியிட்டதற்காக இந்து என்.ராமிற்கு மிரட்டல்கள் வருகின்றன. அவரை மிரட்டி, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால், இங்கிருக்கும் அனைத்து கட்சிகளும்இந்து என்.ராமுக்கு ஆதரவாக துணை நிற்போம்.

‘இந்து, ராம்’ என்ற இந்த இரண்டு வார்த்தையை வைத்து ஆட்சியை பிடிக்கலாம் என்று நினைத்தீர்கள். ஆனால், நீங்கள் தற்போது அந்த இரண்டு வார்த்தைகளுக்கு தான் பயப்படுகிறீர்கள்.