திமுக எதிர்க்கும் அனைத்து சட்டங்களும், திமுகவால் கையெழுத்திடப்பட்டவையே – கருணாஸ்

998

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்திற்கு நேரில் சென்று, முதலமைச்சர் பழனிசாமியை கருணாஸ் சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, அதற்கான சட்டம் முன்வடிவை கொண்டுவந்ததற்காக முதல்வரிடம் நன்றி தெரிவித்ததாக கூறினார்.

குடியுரிமை திருத்த சட்டத்தால் தமிழகத்தில் ஒருவர் கூட பாதிக்கமாட்டார்கள் என முதல்வர் தன்னிடம் உறுதி அளித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், குடியுரிமை திருத்த சட்டம் விவகாரத்தில் அரசியல் பேசுவது தவறு என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுக எதிர்க்கக்கூடிய அனைத்து சட்டங்களும், அன்றே திமுகவால் கையெழுத்திடப்பட்டவை என்று சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் குற்றஞ்சாட்டினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of