மழைநீர் வடிகால்வாய்களை தூய்மை படுத்தாததே, நோய்கள் பரவுவதாற்கான காரணம் – மா.சுப்பிரமணியன்

458

மழைநீர் வடிகால்வாய்களை தூர்வாரி தூய்மை படுத்தாததே, கொசுக்கள் உற்பத்தி நோய்கள் பரவுவதாக சென்னை மாநாகராட்சியின் முன்னாள் மேயரும், திமுக எம்.எல்.ஏ-வுமான மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் திமுக சார்பில் நிலவேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், ஒவ்வொரு பருவமழைக்கும் முன்னால் டெங்கு, பன்றி போன்ற காய்ச்சல்கள் பரவுவதற்கு தெருக்களில் தேங்கியிருக்கும் குப்பைதான் காரணம் என கூறினார்.

தினந்தோறும் சேறும் குப்பைகளை அள்ளுவதற்கு பணியாட்கள் இல்லை என்று தெரிவித்த மா.சுப்பிரமணியன், மழைநீர் வடிகால்வாய்களை தூர்வாரி தூய்மை படுத்தாததால் கொசுக்கள் உற்பத்தியாகி மக்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of