20 ஆதரவு எம்எல்ஏ.க்கள் குற்றாலத்தில் தஞ்சம்

618

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மற்றும் தகுதி நீக்க எம்எல்ஏக்கள் என மொத்தம், 20 பேர் குற்றாலத்தில் முகாமிட்டுள்ளனர்.

தினகரனின் தீவிர ஆதரவாளரும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏவுமான தங்கதமிழ்செல்வன் மேற்பார்வையில் இவர்கள் குற்றாலத்தில் உள்ள இசக்கி ஹைவியூ ரிசார்ட்டில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தங்கதமிழ் செல்வன், நேற்றிரவு சில எம்எல்ஏ,க்களும், இன்று காலை சில எம்எல்ஏ.க்களும் என 20 பேர் இங்கு முகாமிட்டுள்ளதாக கூறினார்.

இன்னும் 2 நாட்கள் இவர்கள், இங்கேயே தங்கி இருப்பார்கள் என்றும் அதன்பின் மீண்டும் சென்னை செல்வோம் எனவும் கூறினார்.

தினகரனுக்கு ஆதரவான 22 எம்எல்ஏ.க்களில் 20 பேர் குற்றாலத்தில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில், இருவர் இன்னும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.