தேர்தல் அலுவலரிடம் டெபாசிட்டுக்கு கடன் கேட்ட ம.நீ.ம வேட்பாளர்? என்ன இப்படி கிளம்பிட்டாய்ங்க!

553

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் பரபரப்பான சூழ்நிலை இருந்து வருகிறது. அதிமுக, திமுக மற்றும் இதர கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் தென்காசி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் நெல்லை கலெக்டர் ஆபீசில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் தேர்தல் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். அதுவும் நேற்று முன்தினம்தான் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்.

அன்றைய தினம் மய்யம் சார்பில் சிவகாசியை சேர்ந்த முனீஸ்வரன் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தார். இவருடன் கோவில்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ்வரன் என்பவரும் வந்தார்.

இவர்தான் அக்கட்சியின் மாற்று வேட்பாளர். இருவரும் மனு தாக்கல் செய்வதற்கு சென்றபோது, டெபாசிட் தொகை 12,500 ரூபாய் தர வேண்டும் என்று தேர்தல் அலுவலர் கூறியுள்ளனர். உடனே வெங்கடேஷ்வரன்,

“சார் என்கிட்ட பணம் பத்தலை.. 300 ரூபாய் குறையுது. நீங்க அதை கடனா தந்தீங்கன்னா நல்லா இருக்கும். மனுவை தாக்கல் பண்ணிட்டு, உடனே கீழே போய் பணத்தை வாங்கி வந்து திருப்பி தந்திடறேன்”

என்று கெஞ்சியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து எப்படியோ ஒரு வழியாக பணத்தை அவர் கட்டியுள்ளார்.