ஆதார் பயன்படுத்தி வாங்கப்பட்ட சிம் கார்டுகளின் சேவை துண்டிக்கப்படாது

535

ஆதார் பயன்படுத்தி வாங்கப்பட்ட சிம் கார்டு சேவை துண்டிக்கப்படும் என வெளியான செய்திகள் கற்பனையான ஒன்று என்று தொலைத்தொடர்பு துறை மற்றும் ஆதார் ஆணையம் விளக்கம் அளித்துள்ளன.

செல்போன் இணைப்பு பெற வாடிக்கையாளர் பற்றிய விவரங்கள் அடங்கிய KYC-யில் ஆதார் எண்ணை தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கட்டாயமாக்கியிருந்தன. இந்நிலையில், ஆதார் தகவல்களை தனியார் நிறுவனங்கள் கோர முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து ஆதாரை அடையாளமாக கொண்டு பெறப்பட்ட 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு, வாடிக்கையாளர்கள் மாற்று அடையாளம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், தவறினால் இணைப்புகள் துண்டிக்கப்படும் எனவும் செய்திகள் பரவியது.

இந்நிலையில், வாடிக்கையாளர்களின் மொபைல் சேவைகள் துண்டிக்கப்படாது என்று தொலைத்தொடர்பு துறை மற்றும் ஆதார் ஆணையம் விளக்கம் அளித்துள்ளன. மேலும் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளன.

Advertisement