கைதிகளுக்கு செல்ஃபோன் விற்ற சிறைக்காவலர்கள்

259

புதுச்சேரியில், ஆளுநர் மாளிகை மற்றும் ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கூறி, சிறையில் இருந்த கைதி நித்திஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சிறையில் இருந்து காவல் கட்டுபாட்டு அறைக்கு போன் செய்து மிரட்டல் விடுத்ததால், கைதிகள் செல்போன் பயன்படுத்துவது விசாரணையில் அம்பலமானது. இதனைத்தொடர்ந்து, சிறைத்துறை உயரதிகாரிகளுடன் முதல்வர் நாராயணசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

இதனையடுத்து சிறைச்சாலையில் கைதிகளுக்கு செல்போன் விற்ற, 4 சிறைக்காவலர்களை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை I.G அதிரடியாக உத்தரவிட்டார். மேலும், கைதிகள் செல்போன் பயன்படுத்துவது தொடர்ந்தால் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of