“வருகிறது நடமாடும் காய்கறி கடை” – முதல்வர் அறிவிப்பு

391

முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்ட வீடியோவில், காய்கறிகள் மற்றும் பழங்களை குளிர்பதன கிடங்குகளில் பாதுகாப்பதற்கான கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.

குளிர்பதன கிடங்கு பயன்பாட்டு கட்டணம் ஏப்ரல் 30 வரை வசூலிக்கப்படாது என்றும், விவசாயிகளிடம் வசூலிக்கப்படும் பயன்பாட்டு கட்டண  தொகையை தமிழக அரசே ஏற்கும் என அறிவித்துள்ளார்.

ஏப்ரல் 30 வரை 1 சதவீதம் சந்தைக் கட்டணத்தை வணிகர்கள் செலுத்த தேவையில்லை என தெரிவித்துள்ளார். காய்கறிகள் மற்றும் பழங்கள் சேகரித்து விநியோகம் செய்ய முன்வரும் நிறுவனங்களுக்கு கடன் வசதி செய்து தரப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

விவசாயிகளின் விளைபொருட்களை விற்பனை செய்ய மாவட்ட வாரியாக அவசரகால தொலைபேசி எண்களும், வியாபாரிகளை தொடர்பு கொள்ளுதல், சரக்கு போக்குவரத்து அனுமதி, குளிர்சாதன கிடங்கு போன்ற  சேவைகளுக்கு உதவும் விதமாக எண்களையும் அறிவித்துள்ளார். உழவர் உற்பத்தியாளர்களர் நிறுவனங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

மக்களுக்கு காய்கறிகள், பழங்கள் தடையின்றி கிடைக்க நடமாடும் வாகனம் மூலம் வழங்கப்படும் என்றும், தொட்டக்கலைத்துறை மூலமாக கூடுதலாக 500 நடமாடும் வாகனங்களில் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of