இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரக் கும்பல்…!

628

ஆந்திர சித்தூர் மாவட்டம் ஸ்ரீசிட்டி தொழிற்பூங்காவில் உள்ள செல்போன் தொழிற்சாலையில், கிருஷ்ணவேணி, ராஜா ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இருவரும் சொந்த ஊர் செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் ராஜாவை அடித்து துரத்திவிட்டு கிருஷ்ணவேணியை அருகேயுள்ள முட்புதருக்கு இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர்.

ராஜா கொடுத்த தகவலின்பேரில் அங்கு வந்த போலீசார், கிருஷ்ணவேணியை தேடினர். ஆனால் இதனை முன்கூட்டியே அறிந்த கும்பல்கிருஷ்ணவேணியை வேறு இடத்திற்கு தூக்கிச்சென்று மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

சூளூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலை அருகே கிருஷ்ணவேணி மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.சூளூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக சூலூர் பேட்டையைச் சேர்ந்த 2 பேரை கைது செய்த போலீசார் மேலும்,3 பேரை தேடி வருகின்றனர்.இவர்கள் மீது நிர்பயா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து,நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Advertisement