மோடி, அமித்ஷாவுக்கு எதிரான வழக்கும்.., சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவு

608

பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் தேர்தல் நடத்தை விதிமீறலில் ஈடுபடுவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக்கோரியும் காங்கிரஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார். அவர் தன்னுடைய வாதத்தில், சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2-ந் தேதி பிறப்பித்த உத்தரவின்படி பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா விவகாரத்தில் ஏற்கனவே முடிவெடுத்தாகி விட்டது என்றும், அது தொடர்பான ஆணையை ஏற்கனவே தேர்தல் கமிஷன் பிறப்பித்து விட்டது என்றும் கூறினார்.

உடனே நீதிபதிகள், இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை கோர்ட்டில் தாக்கல் செய்யுமாறு தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை நாளைக்கு (புதன்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.