தேர்தல் விதிமீறலில் மோடி,அமித்ஷா – பிரச்சாரத்திற்கு தடை விதிக்க கோரிக்கை

452

தேர்தல் ஆணைய விதிகளை மீறிய பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா ஆகியோருக்கு, 48 மணி நேரத்தில் இருந்து 72 மணி நேரம் வரை பிரசாரத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என,காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான அபிஷேக் மனு சிங்வி உள்ளிட்டோர், இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் இதுதொடர்பாக புகார் தெரிவித்தனர்.

அதில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வாக்களித்த பின்பு, மை தடவிய விரலைக் காட்டி மோடி பேரணியாக சென்றது தேர்தல் ஆணைய விதிகளுக்கு எதிரானது என்றும், இதேபோல், அமித்ஷாவும் தொடர்ந்து விதமீறலில் ஈடுபடுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.