என் காவலருக்கு தனி வாகனம் தாருங்கள்! போராட்டம் நடத்திய மோடி சகோதரர்!

585

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இருந்து ஜெய்பூர் சென்ற பிரதமர் மோடியின் சகோதரர் பிரஹ்லத் மோடிக்கு பாதுகாப்புக்காக இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

அவர்கள் பிரஹ்லத்தின் காரில் தான் பயணிப்பார்கள் என்று உத்தரவிடப்பட்ட நிலையில் அவர்களுக்கு தனி வாகனம் கொடுக்க வேண்டும் என்று கேட்டு பிரஹ்லத் மோடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஜெய்பூர்- அஜ்மர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பக்ரு காவல் நிலையத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அவர், ராஜஸ்தானில் தான் எங்கு சென்றாலும் தனக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படுவதாகவும், ஜெய்பூர் காவல் ஆணையர் மட்டுமே இவ்வாறு நடந்துக்கொள்வதாகவும் கூறினார்.

பின்னர் அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பிறகு, பாதுகாவலர்களுடன் ஒரே காரில் பிரஹ்லத் மோடி சென்றார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of