ஆட்டோவில் சென்ற மோடியின் தம்பி மகள்..! இரண்டு பேர் செய்த விபரீதம்..! போலீஸ் வலைவீச்சு..!

329

பிரதமர் மோடியின் தம்பியான பிரகலாத் மோடியின் மகள் தமயந்தி டெல்லியில் உள்ள குஜராத் சமாஜ் பவனில் தங்குவதற்கு அறையை முன்பதிவு செய்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசிலிருந்து, டெல்லி சென்ற தமயந்தி குஜராத் சமாஜ் பவனுக்கு ஆட்டோவில் சென்றுள்ளார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், தமயந்தியின் பர்சை பறித்துச் சென்றுள்ளனர்.

அந்த பர்சில் 56 ஆயிரம் ரூபாய் பணம், செல்போன் மற்றும் முக்கிய ஆவணங்கள் இருந்துள்ளன. இதுகுறித்து தமயந்தி அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.