கொச்சியா? கராச்சியா? – கன்ஃபியூஸ் ஆன பிரதமர்

179

குஜராத்தில் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கொச்சி என்று கூறுவதற்கு பதிலாக கராச்சி என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பாஜக, பிரதமர் மோடியை முன்னிறுத்தி பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறது.ஏற்கனவே நேற்று முன் தினம்தான் பிரதமர் மோடி, டிஸ்லெக்சியா மாணவர்கள் குறித்து தவறாக பேசி சர்ச்சையில் சிக்கினார்.

இந்த நிலையில் நேற்று மாலை அவர் குஜராத்தில் பேசிய நிகழ்வு மீண்டும் சர்ச்சையாகி இருக்கிறது. குஜராத்தில் அவர் நேற்று பாஜக சார்பில் நடந்த தேர்தல் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

பிரதமர் மோடி குஜராத்தில் நேற்று குரு கோவிந்த் சிங் மருத்துவமனையில் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார். இதில் 700 படுக்கை வசதிகள் உள்ளது. இதை திறந்து வைத்து அவர் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டம் குறித்து பேசினார்.

இந்த கூட்டத்தில் கொச்சி என்று கூறுவதற்கு பதிலாக கராச்சி என பேசினார். இந்த பேச்சால் பிரதமர் மோடி பாகிஸ்தான் ஞாபகத்தில் இருக்கிறார் என சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

கராச்சி என்பது பாகிஸ்தானில் அமைந்திருக்கும் ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.