மோடி பிரசார மேடைக்கு கீழே தீடீர் ‘தீ’ ?

420

நாடாளுமன்ற தேர்தலின் இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் பாஜக சார்பில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசிக்கொண்டிருந்தார். அப்போது மேடைக்கு கீழே குளிர்சாதன எந்திரத்துக்கு செல்லும் வயர் அதிக வெப்பம் காரணமாக திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதை கண்ட பிரதமர் மோடியின் பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக தீயை அணைத்தனர். இதனால் அங்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் மேடையில் இருந்தவர்களுக்கு தெரிவிக்கப்படாததால், மோடி இடையூறு இன்றி தொடர்ந்து பேசி முடித்தார்.

எனினும் அஜாக்கிரதையாக இருந்ததாக மேடை காண்டிராக்டர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of